மேலும் செய்திகள்
அவிநாசி தேரோட்டம்; பாதுகாப்பு சிறக்க ஆலோசனைகள்
29-Apr-2025
அவிநாசி : கடந்த சில நாள் முன், அவிநாசி நகராட்சி வசம் உள்ள மேற்கு ரத வீதியில், 40 லட்சம் செலவில் தார் ரோடு புதிதாக போடப்பட்டது.தேரோட்டத்துக்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில் போடப்பட்ட தார் சாலை பணியால் மேற்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பெரிய தேர் நேற்று காலை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கத் துவங்கியதும், தார் ரோட்டில் பின்பக்க சக்கரம் புதைந்தது. புல்டோசர் கொண்டு தேரை முன்னே நகர்த்த முயற்சி செய்த போதும் தேர் சக்கரம் மேலும் முக்கால் அடி ஆழத்திற்கு புதைந்தது.இதனால் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தேரை நகர்த்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஆனது. ரோட்டில், போதிய இடவசதி இல்லாமல் புல்டோசர் இயக்குவதற்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் தனியார் கட்டடத்தின் கட்டுமான பொருட்கள் கொட்டி வைத்து ரோட்டை ஆக்கிரமித்து வைத்ததால் தேரை நகர்த்த முடியாமல் சன்னை மற்றும் குடில் முட்டி போடுபவர்கள், பக்தர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தேரின் பின்பக்கமாக இரண்டு புல்டோசர்கள் கொண்டு கடும் முயற்சிக்குப் பின் நேற்று காலை 11:35 மணியளவில் நிறுத்தப்பட்டு இருந்த இடத்திலிருந்து தேர் நகர்ந்தது. 18 டன் கழிவு சேகரிப்பு
நான்கு ரத வீதிகளிலும் உள்ள மண்டபங்கள், அறக்கட்டளை மற்றும் தன்னார்வலர் மூலம் வழங்கப்பட்ட அன்னதான உணவு பொருள் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், பேப்பர் கப் உள்ளிட்ட கழிவுகள் என அனைத்தையும் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி தலைமையில் நகராட்சி துாய்மை பணியாளர்கள் தேர் நிலை சேர்ந்ததும் விரைந்து செயல்பட்டு துாய்மைப்படுத்தினர். அவ்வகையில், நேற்று மட்டும் 18 டன் குப்பை கழிவுகள் நேற்று சேகரித்து துாய்மைப்படுத்தப்பட்டது.
29-Apr-2025