அன்னதான விழா
குரு தேவா அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில், 12ம் ஆண்டு கன்னி பூஜை மற்றும் அன்னதான விழா திருப்பூர் அய்யன் நகர், 5வது வீதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் நடந்தது. ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கன்னி பூஜையில் பங்கேற்றனர். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, அன்னதானத்தை துவக்கி, பொதுமக்களுக்கு வழங்கினார்.