உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆதரவற்றோருக்கு ஈகை தந்த உதவி

ஆதரவற்றோருக்கு ஈகை தந்த உதவி

பல்லடம்: ஈகை அறக்கட்டளை நிறுவனர் கார்த்திகேயன் கூறியதாவது: ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும், வறியவர்களும் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில், புத்தாடை, இனிப்பு மற்றும் மளிகை சாமான்கள் உள்ளிட்ட வற்றை வழங்கி வருகிறோம். நடப்பு ஆண்டு, பல்லடம் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள், பெற்றோரை இழந்த ஆதரவற்றோர் என, 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோருக்கு தேவையான நல உதவிகள் வழங்கப்பட்டன. நேரில் வர இயலாதவர்களுக்கு, அவர்கள் வீடுகளுக்கே சென்றும் நல உதவி வழங்கப்பட்டது. சக மனிதர்களைப் போல், அவர்களும் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த உதவிகள் வழங்கப்பட்டன. ஈகை அறக்கட்டளையில் இணைந்துள்ள தன்னார்வலர்கள் பலரால் இதுபோன்ற சேவைகளை செய்ய வாய்ப்பு கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ