செட்டிபாளையம், காளம்பாளையம் மின் அலுவலகம் இடமாற்றம்
அவிநாசி; திருப்பூர், பாண்டியன் நகர் பிரிவு அலுவலகத்தை சேர்ந்த செட்டிபாளையம், காளம் பாளையம் ஆகிய இரு பகிர்மான அலுவலகங்களும், 23ம் தேதி முதல் நிர்வாக காரணங்களுக்காக வெங்கமேடு பிரிவு அலுவலகத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் செட்டிபாளையம் பகிர்மானத்திலுள்ள, 173-008 என துவங்கும் மின் இணைப்பு எண்கள், 181--005- செட்டிபாளையம் என்ற மின் பகிர்மான கோடு எண்ணுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.காளம்பாளையம் பகிர்மானத்திலுள்ள 173--009 -எனத் தொடங்கும் மின் இணைப்பு எண்கள், 181-006 என்ற மின் பகிர்மான கோடு எண்ணுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ''செட்டிபாளையம் மற்றும் காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் இனிவரும் காலங்களில் மின்சாரம் சார்ந்த சேவைகளுக்கு உதவி மின் பொறியாளர் வெங்கமேடு பிரிவு அலுவலகத்தை அணுக வேண்டும்'' என, அவிநாசி கோட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.