மேலும் செய்திகள்
முதல்வர் வருகை : ட்ரோன் பறக்க தடை
10-Jun-2025
திருப்பூர்; தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகை தரவுள்ளார். எம்.எல்.ஏ., இல்ல திருமண விழா மற்றும் அரசு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட தி.மு.க., செயலாளருமான செல்வராஜ் இல்ல திருமண வரவேற்பு விழா இன்று நடைபெறுகிறது. கோவை - சேலம் பைபாஸ் ரோடு, செங்கப்பள்ளி பகுதியில் உள்ள சொர்ண மஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.இன்று காலை, 10:00 மணியளவில், சென்னையிலிருந்து சிறப்பு விமானத்தில் கோவை வரும் முதல்வர், சாலை மார்க்கமாக காரில் அவிநாசி வழியாக செங்கப்பள்ளி வந்து திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கிறார். அதையடுத்து அதேபகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கி, திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார். அதன்பின், சேலம் புறப்பட்டுச் செல்கிறார்.திருப்பூர் வருகை தரும் முதல்வரை வரவேற்கவும், திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கவும், எம்.எல்.ஏ., செல்வராஜ், மாணவர் அணி செயலாளர் திலக்ராஜ் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். 'ட்ரோன்' பறக்க தடை
திருப்பூர் மாவட்ட போலீசார் விடுத்துள்ள அறிக்கை:முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளியில் அமைந்துள்ள சொர்ண மஹாலில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று வர உள்ளார். இதையொட்டி, முதல்வர் செல்லும் வழியில் மற்றும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
10-Jun-2025