உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழந்தை தொழிலாளர் இல்லாத ஊராட்சிகள் * தொழிலாளர் துறை விழிப்புணர்வு

குழந்தை தொழிலாளர் இல்லாத ஊராட்சிகள் * தொழிலாளர் துறை விழிப்புணர்வு

திருப்பூர் : அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 63 ஊராட்சிகள், குழந்தை தொழிலாளர் இல்லாத ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்ட தொழிலாளர்துறை சார்பில், குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை முறை ஒழித்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த கிராம சபா கூட்டங்களில், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருப்பூர் மாவட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களில் தேர்வாகியுள்ள, 63 கிராம ஊராட்சிகள், குழந்தை தொழிலாளர் இல்லாத ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கணபதிபாளையம், அலங்கியம், விருமாண்டம்பாயைம், சங்கரண்டாம்பாளையம் உட்பட 39 ஊராட்சிகளில் நடந்த கிராம சபா கூட்டங்களில், தொழிலாளர் துறை அலுவலர்கள் பங்கேற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊராட்சி தொடர்பான பணிகளை ஒப்பந்தம் செய்யும் போது, 'குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை' என, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சுயசான்று பெற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி