| ADDED : நவ 15, 2025 01:09 AM
திருப்பூர்: திருப்பூர், பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா, பாரம்பரிய விதை நடும் விழா, காந்தி குறித்த கண்காட்சி, சிறார் திரைப்படம் திரையிடல் ஆகிய விழாக்கள் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது. விழாவையொட்டி, பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ஜாஸ்மின்மாலா தலைமை வகித்தார். மாநகராட்சி கவுன்சிலர் முத்துசாமி, வடக்கு வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன், இயற்கை விவசாயி பிரியா ஆகியோர் பாரம்பரிய விதைகள் நடும் விழாவை துவக்கி வைத்தனர். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு தொட்டி, ஒரு செடி வழங்கப்பட்டது. காந்தி குறித்த புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி அரங்கை, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சித்ரா, வட்டார கல்வி அலுவலர் ஷியாமளா ஆகியோர் துவக்கி வைத்தனர். குழந்தைகள் தின சிறப்பு நிகழ்வாக, ஆசிரியர்கள் மாறுவேடமிட்டு நடனமாடி குழந்தைகளை மகிழ்வித்தனர். காந்தி கண்காட்சி அரங்களை குழந்தைகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். ஆசிரியர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.