சித்ராதேவி ஜாமின் மனு இன்று விசாரணை
திருப்பூர்; அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாமியார் சித்ராதேவி ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.அவிநாசியை சேர்ந்த இளம்பெண் ரிதன்யா, 27, என்பவர் புகுந்த வீட்டு கொடுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரும் அதன் பின்னர் மாமியார் சித்ராதேவியும் கைது செய்யப்பட்டனர்.கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமின் மனுக்கள் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அவர்கள் தரப்பில் வக்கீல்கள் சின்னசாமி மற்றும் சண்முகானந்தம் ஆகியோர் ஆஜராகினர்.இதில், ரிதன்யாவின் தந்தை தரப்பில், வக்கீல்கள் சுப்ரமணியம், மோகன்குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். இரு தரப்பு மனுக்களையும் விசாரித்த நீதிபதி குணசேகரன், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.கவின்குமார் தரப்பு வக்கீல்கள் கூறுகையில், 'முதல் கட்ட ஜாமின் மனு தள்ளுபடி ஆகிவிட்டது. சட்ட விதிகளின் படி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து அதற்கேற்ப முடிவு செய்யப்படும்,' என்றனர்.இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சித்ராதேவிக்கு ஜாமின் கேட்டு, வக்கீல்கள் சின்னசாமி மற்றும் சண்முகானந்தம் ஆகியோர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு அளித்தனர். இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இன்று (9ம் தேதி) விசாரணைக்கு வரவுள்ளது.