உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  போதை கும்பலை தட்டித்துாக்கிய போலீஸ்

 போதை கும்பலை தட்டித்துாக்கிய போலீஸ்

இந்தாண்டு துவக்கத்தில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக ராஜேந்திரன் பொறுப்பேற்றார். பழைய கமிஷனர் லட்சுமியின் பாணியில் செயல்பட முனைகிறார். அவரை விட கொஞ்சம் கூடுதலாகவே கெடுபிடி காட்டுகிறார். அதேசமயம் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இணக்கம் ஏற்படுத்த கொண்டு வரப்பட்ட,'டெடிகேட்டடு பீட்' திட்டம், 'ஆப்ரேஷன் ஜீரோ கிரைம்' போன்ற திட்டங்கள் செயல்பாடு பெயரளவில்தான் இருந்தது. போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை பிரதானமாக செய்யவும், மற்ற உதவிகள் எல்லாம் அடுத்தது என்ற பாணியில் பணிபுரிய ஆரம்பித்தனர். சட்டம்-ஒழுங்கு, குற்ற தடுப்பு, போக்கு வரத்து போன்ற விஷயங்களில் கமிஷனர் அக்கறை காட்டுகிறார். நெரிசல் தடுக்க முனைப்பு போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு 'ஸ்பாட் பைன்' முறையில் அபராதம் வசூலிக்கப் பட்டது. ஆண்டுக்கணக்கில் நிலுவையில் அபராதம் கட்டாதவர்களை அழைத்து வசூலிக்கப்பட்டது. இதற்காக பிரத்யேக போலீஸ் குழு அமைக்கப்பட்டது. விபத்தை குறைக்க, தடுக்க முயன்றாலும், உயிரிழப்பு ஏற்படுவதை முழுமையாக தடுக்க முடியவில்லை. 'போக்சோ', 'சைபர் கிரைம்' போன்ற விழிப்புணர்வுகள் தொடர்ந்து, பள்ளி, கல்லுாரி, நிறுவனங்களில் போலீசார் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. புஷ்பா சந்திப்பில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட ப்ரீ சிக்னல் முறையை, மற்ற சிக்னல்களில் அமல்படுத்த திட்டமிட்டு, குமார் நகர், எஸ்.ஏ.பி., பகுதி, காந்தி நகர் போன்ற இடங்களில் அமல்படுத்தினர். இதன் காரணமாக, முன்பு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் குறைந்தது. அவிநாசி ரோடு ஒருவழிப்பாதை மாற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு காரணத்தால், ஆரம்பத்திலேயே கைவிடப்பட்டது. ஒழுங்கீன போலீஸ் மீது நடவடிக்கை பள்ளிகள் அருகே காலை, மாலை என, போலீசார் கண்காணித்து வருகின்றனர். மாநகருக்கு, 'பிங்க்' ரோந்து வாகனங்கள், புதியவை வந்தன. பெண் போலீசார் இவ்வாகனங்களில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மாநகரில் பணியில் ஒழுங்கீனமாக இருந்த போலீசார் மீது 'சஸ்பெண்ட்' நடவடிக்கை மட்டுமல்லாமல், விசாரணை முடிந்த பின், சில போலீசாருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டது. வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் போன்றவை கமிஷனர் எடுத்தார். போதை கும்பலுக்கு 'குறி' இந்தாண்டு நடந்த கொலைகள் பெரும்பாலானவை முன்விரோதம், போதையால் நடந்தவை. டூவீலர் திருட்டு வழக்குகள் போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளன. போதை, கஞ்சா, மது விற்பனை மற்றும் அடிதடி வழக்குகள் வழக்கம் போல் உள்ளது. தொடர்ந்து, போதை வஸ்துகளை கட்டுப்படுத்த போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்தனர். இதற்காக, பிரத்யேகமாக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு அன்றாடம் ரயிலில் இருந்து வரும் வெளிமாநில வாலிபர்கள், ஓட்டலில் திடீர் சோதனை போன்றவை மேற்கொள்ளப்பட்டன. கஞ்சா, குட்கா, மெத்தபெட்டமைன், ஹெராயின் என, போதை பொருட்கள் பறிமுதல் கடந்த ஆண்டை விட, இந்தாண்டு அதிகம். இந்த அடிப்படையில் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. வங்கதேசத்தினர் கைது திருப்பூர் மாநகரில் வடமாநிலத்தினர் பெயரில் ஊடுருவியிருந்த வங்கதேசத்தினர், நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து தப்பித்து விடாமல் இருக்க கண்காணிப்பை தொடர்ந்தனர். புத்தாண்டில் சுறுசுறுப்பு கடந்த ஜன., முதல் தற்போது வரை குற்றங்கள், விசாரணை, அதிகாரிகள் மாற்றம், புதிய திட்டங்கள் அமல் என, மாநகர போலீசில் பல மாற்றங்களை கண்டிருந்தாலும், வரும் புதிய ஆண்டிலும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள், விபத்து, குற்றங்கள் இல்லாமல் இருக்க தேவையான விஷயங்களை திட்டமிட போலீசார் ஆரம்பித்துள்ளனர். முன்னெடுப்பாக, புதிய ஆண்டு துவக்கத்திலும் எவ்வித பிரச்னைகள் இல்லாமல், விபத்தில்லா ஆண்டாக கொண்டாட வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளனர். பொது இடத்தில், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொண்டாட்டம் இருந்தால், உரிய சட்ட பிரிவுகளின் படி கைது நடவடிக்கை பாய உள்ளது. வரும் ஆண்டில் குற்றங்கள் இல்லாத மாநகரமாக மாற்ற தேவையான களப்பணியை மேற்கொள்ளுவோம் என உறுதியாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ