உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சீதோஷ்ண நிலை மாற்றம் மாமரங்களில் பாதிப்பு

 சீதோஷ்ண நிலை மாற்றம் மாமரங்களில் பாதிப்பு

உடுமலை: சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மாமரங்களில் நோய்த்தாக்குதல் ஏற்பட்டு, விளைச்சல் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், ஒன்பதாறு செக்போஸ்ட், மானுப்பட்டி, ஜல்லிபட்டி, கொங்குரார் குட்டை, திருமூர்த்திநகர், பாப்பனுாத்து உட்பட பகுதிகளில், பல ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானாவாரி மற்றும் இறவை பாசனத்தில், செந்துாரம், பங்கனப்பள்ளி, கல்மாரி, மல்கோவா உட்பட 20க்கும் அதிகமான மா ரகங்கள் இப்பகுதியில், பயிரிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இரண்டு சீசன்களில், மாங்காய் அறுவடை மேற்கொள்ளப்படும். ரகங்களைப்பொறுத்து, மரத்திற்கு அதிகபட்சமாக, 300 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். வழக்கமாக, மே மாத இறுதியில், மாங்காய்கள் அறுவடை செய்யப்படும். இந்தாண்டு தொடர் மழைக்கு பிறகு அதிக பனிப்பொழிவு உள்ளிட்ட சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மாமரங்களில் நோய்த்தாக்குதல் தென்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை