உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவை - பழநி தைப்பூச சிறப்பு ரயில் 

கோவை - பழநி தைப்பூச சிறப்பு ரயில் 

திருப்பூர்: கோவையில் இருந்து திண்டுக்கல்லுக்கு தைப்பூச சிறப்பு ரயில் (எண்:06106) அறிவிக்கப்பட்டுள்ளதால், திருப்பூரில் இருந்து ரயிலில் பழநி செல்ல விரும்புவோர் கோவை சென்று அங்கிருந்த பயணிக்க வேண்டும்.வரும், ம் தேதி தைப்பூசம். ரயில் பயணிகள் வசதிக்காக கோவையில் இருந்து திண்டுக்கல்லுக்கு சிறப்பு ரயில் (எண்:06106) இயக்கப்படுகிறது. காலை, 9:35 க்கு கோவையில் புறப்படும் ரயில், போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக பயணித்து மதியம், 12:05 க்கு பழநி செல்கிறது.ஒட்டன்சத்திரம் கடந்து, மதியம், 1:10 க்கு திண்டுக்கல் சென்றடையும். மதியம், 2:00 மணிக்கு திண்டுக்கல்லில் புறப்படும் ரயில், மதியம், 3:00 மணிக்கு பழநி கடந்து, மாலை 5:50 க்கு கோவை வந்தடையும். முன்பதிவில்லா பொது பெட்டிகளை கொண்ட இந்த மெமு ரயில் பிப்., 5 முதல் 14 வரை ஒன்பது நாட்களுக்கு இயங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் வழியாக திண்டுக்கல்லுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்காமல், போத்தனுார், பொள்ளாச்சி வழியாக அறிவித்துள்ளதால், ஈரோடு மற்றும் திருப்பூரில் இருந்து பழநிக்கு ரயிலில் செல்ல விரும்புவோர் கோவை சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ