மேலும் செய்திகள்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
18-Feb-2025
உடுமலை; மடத்துக்குளம் தாலுகாவில், உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், திருப்பூர் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கோரி கலெக்டரிடம் மனுக்களை கொடுத்னர்.தமிழக அரசு, ஒவ்வொரு மாதமும், ஒரு தாலுகாவில், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் முகாமிட்டு, கிராமங்கள் அரசுத்துறை திட்டங்களை ஆய்வு செய்து, அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.அதன் அடிப்படையில், மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள கிராமங்களில், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் அதிகாரிகள் குழு நேற்று முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகம் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மாலை, தாலுகா அலுவலகத்தில், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார். இதில், பொதுமக்கள் பல்வேறு குறைகளை தீர்க்க வலியுறுத்தினர். மேலும், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை, பொது போக்குவரத்து உள்ளிட்ட இடங்களில் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இன்று காலை, பேரூராட்சி, ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வினியோகம், பள்ளிகளில் காலை உணவு திட்டம், பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
18-Feb-2025