மேலும் செய்திகள்
கண்முன் அழிந்து வரும் முன்னோர் வாழ்விடங்கள்
19-Nov-2024
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், பொங்கலுார் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டு, பல்வேறு பகுதிகளில் நடந்து வரும், 17 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்டார்.பல்லடம், செம்மிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு, ஆய்வகம் மற்றும் மருந்துகளின் இருப்பு, பேவர் பிளாக் பதிக்கும் பணிகளை பார்வையிட்டார். நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்ட, 17 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகளை பார்வையிட்டு, முடிவுறாத பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பல்லடம் வட்டாரம், அய்யம்பாளையம் ஊராட்சியில், 20 பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு குறித்து வழங்கப்படும் பயிற்சியை பார்வையிட்டு, 10 பேருக்கு புறக்கடை கோழி வளர்ப்புக்கு, 10 கோழி குஞ்சுகள் வழங்கினார்.ஒருவருக்கு, 50 கோழி குஞ்சுகள் வீதம், 500 கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன. அருள்புரம் வட்டாரத்தில், 35 மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த தொழில் முனைவோருடன் கலந்தாய்வு நடத்தினார்.பொங்கலுார் ஊராட்சி ஒன்றியத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்தாய்வு நடத்தி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் சாம் சாந்தகுமார், பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவி தேன்மொழி, பி.டி.ஓ., கனகராஜ், பானுப்பிரியா (பல்லடம்), விஜயகுமார், ஜோதி (பொங்கலுார்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
19-Nov-2024