பணியின் நிலை கலெக்டர் ஆய்வு
- நமது நிருபர் -திருப்பூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை முன்னிலைவகித்தார். கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டம், நுாறுநாள் வேலை திட்டம், நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு வகையான பணிகள்; அவற்றின் தற்போதைய நிலை குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார்.