டிராக்டரை இயக்கியபோது கல்லுாரி தாளாளர் பலி
பொங்கலுார்: அவிநாசிபாளையத்தில் உள்ள தனியார் கல்லுாரி தாளாளர் தனராஜசேகர், 49; தனது தோட்டத்தில் டிராக்டரை இயக்கிய போது, ரோட்டாவேட்டரில் சிக்கி இடது கால் நசுங்கியது. பல்லடம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.