வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மூட நபிம்பிக்கையில் இது ஒரு ரகம் போல அதை தினமும் பார்த்து விற்பனை செய்கின்றனவே அவன் அழகி அல்ல இருக்கா ? கேட்ட அடிக்க அருவனுக
திருப்பூர் : தமிழ் புத்தாண்டு 'விசுவாவசு' பிறந்தது. அதிகாலையில் பழங்கள், பணம், நகைகளைப் பார்த்து, மக்கள் கண் விழித்தனர்.'விசுவாவசு' தமிழ்ப் புத்தாண்டையொட்டி, திருப்பூர் மார்க்கெட்களில், பழ வியாபாரம் நேற்று களைகட்டியிருந்தது. சித்திரைக்கனிக்காக, வீடுகள் மற்றும் கோவில்களில், மா, பலா, வாழை ஆகிய முக் கனிகளுடன், பலவகை பழங்களை வைத்து, வழிபாடு நடத்துவர்.பழக்கடைகளில் கூட்டம், கூட்டமாக மக்கள் காணப்பட்டனர். விலை அதிகரித்திருந்தபோதும், பழங்கள் விற்பனை முழுவீச்சில் நடந்தது.திருப் பூர் பூ மார்க்கெட் அருகே, சரக்கொன்றை மலர்கள் விற்பனை செய்யப் பட்டன. இன்று அதிகாலை, கண் விழித்தெழுந்ததும், வீட்டில் தட்டில் வைக்கப்பட்டிருந்த பழங்கள், பணம், நகை ஆகியவற்றைபார்த்தனர்.பின் கண்ணாடியில் அவரவர் முகத்தைப் பார்த்தனர். மகாலட்சுமியை நினைத்து தட்டைத் தொட்டு வணங்கினர். இன்று, அனைத்து விநாயகர் கோவில் மற்றும் அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.குறிப்பாக, கொடுமுடி, அவிநாசி, பவானி கூடுதுறை ஆகிய பகுதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்துவந்து, அபிேஷகம் செய்வது வழக்கம். அதற்காக, கோவில்கள் விழாக்கோலம் பூண்டன; நேற்றே பக்தர்கள் மேள, தாளத்துடன் சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.திரு.வி.க., நகர் செல்வ விநாயகர் கோவில், சேரன் காலனி குபேர விநாயகர், கோவில்வழி ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் மண்ணரை செல்வ விநாயகர் கோவில் உட்பட, பெரும்பாலான கோவில்களில், நேற்றே தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது; இன்று மகா அபிேஷகம், அலங்காரபூஜை மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது. சில கோவில்களில், கனி காணுதல் நிகழ்ச்சியும் வெகுசிறப்பாக நடைபெறும்.
மூட நபிம்பிக்கையில் இது ஒரு ரகம் போல அதை தினமும் பார்த்து விற்பனை செய்கின்றனவே அவன் அழகி அல்ல இருக்கா ? கேட்ட அடிக்க அருவனுக