மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் கமிஷனர்! நகர் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தலாம்
திருப்பூர் : 'திருப்பூர் மாநகராட்சியில், உட்கட்டமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்ற அதிகாரியை, கமிஷனராக நியமிக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட, 60 வார்டுகளில், உள்ளூர், இடம் பெயர்ந்து வந்தவர்கள் என, 18 லட்சம் பேர் வரை வசிக்கின்றனர். திருப்பூர் நகர சாலைகள், மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்கள் திருப்திகரமாக இல்லை. மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள், ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை அகற்றுவதிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதிலும், மாநகராட்சி நிர்வாகம் திணறிக் கொண்டிருக்கிறது.இத்தகைய சூழலில், மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் கமிஷனர் பணியமர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.