உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குப்பை கொட்டிய நிறுவனங்கள் சிக்கின

 குப்பை கொட்டிய நிறுவனங்கள் சிக்கின

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில், நுாறு கிலோவுக்கு மேல் கழிவுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அதை முறைப்படி தாங்களாகவே அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாநகராட்சி உதவி கமிஷனர் கணேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர் ஆத்துப்பாளையத்தில் பொது இடங்களில் குப்பை கொட்ட வந்த நிறுவனத்துக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சிவன் தியேட்டர் அருகில் உள்ள நிறுவனம் மற்றும் மருதாசலபுரம் மைதானத்தில் குப்பை கொட்ட வந்த நிறுவனம் என, இரு நிறுவனங்களுக்கும் தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை