உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூரண மதுவிலக்கு த.மா.கா., கோரிக்கை

பூரண மதுவிலக்கு த.மா.கா., கோரிக்கை

தாராபுரம்: தமிழ் மாநில காங்., திருப்பூர் மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமையில், உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கூட்டம், தாரா-புரத்தில் நேற்று நடந்தது. நிர்வாகிகள் நடராஜ், ரத்தினசபாபதி முன்னிலை வகித்தனர். மாநில பார்வையாளர் ஈரோடு ஆறுமுகம் பேசினார். அமராவதி பாசன பரப்பளவு குறையாமல் தடுக்கவும், நீராதாரங்களை மேம்படுத்தவும் ஏதுவாக, மேல் அமராவதி அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மனித வளத்தை சிதைக்கும் மதுவை, மனித சமுதாயத்தில் இருந்து விலக்க ஏது-வாக பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் விமல்குமார், சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை