மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
02-Jul-2025
உடுமலை; உடுமலை குறுமைய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற, குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். உடுமலை குறுமைய அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடக்கிறது. மாணவர்களுக்கான கபடிப்போட்டி அந்தியூர் கமலம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. இப்போட்டியில், 14 வயதினருக்கான பிரிவில், குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் விமலா, செயலாளர் சந்தோஷ், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ஜூலியா, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
02-Jul-2025