உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  காங். அலுவலகத்துக்கு சீல் திருப்பூரில் பரபரப்பு

 காங். அலுவலகத்துக்கு சீல் திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூரில், ஆக்கிரமிப்பில் இருந்த காங். கட்சி அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். திருப்பூர், 15 வேலம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து காங்கிரஸ் கட்சியினர் கட்டடம் கட்டி, கட்சி அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்தனர். இதனையறிந்த ஆக்கிமிப்பை அகற்ற வலியுறுத்தி வெங்கடாசலம் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், கோர்ட் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தவிட்டு இருந்தது. அதனையொட்டி, திருப்பூர் வடக்கு தாலுகா நிர்வாகம் சார்பில், ஆக்கிரமிப்பை அகற்ற காங். அலுவலகத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதனால், திருப்பூர் வடக்கு துணை தாசில்தார் அருள்,ஆர்.ஐ. சுரேஷ், ஆகியோர் வேலம்பாளையம் போலீஸ் பாதுகாப்புடன் சென்று, 'அலுவலகத்தை காலி செய்ய வேண்டும்,' என்றனர். அங்கிருந்த நிர்வாகிகள், 'கால அவகாசம் வேண்டும்' என்று கேட்டதற்கு, அதிகாரிகள் மறுத்தனர். உடனே காங். மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரன், தலைமையில் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதன்பின், அதிகாரிகள் காங். அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை