உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டுமான பொருட்கள் கண்காட்சி துவக்கம்

கட்டுமான பொருட்கள் கண்காட்சி துவக்கம்

உடுமலை, ; அகில இந்திய கட்டுநர் வல்லுனர் சங்கம், உடுமலை மையம் மற்றும் உடுமலை தமிழிசை சங்கம் சார்பில், கட்டுமான பொருட்கள் கண்காட்சியான 'அஸ்திவாரம்' நேற்று உடுமலை தேஜஸ் மகாலில் துவங்கியது. நாளை (5ம் தேதி) வரை நடக்கிறது.பி.ஏ.ஐ., மாநில தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். எம்.பி.,ஈஸ்வரசாமி கண்காட்சியை திறந்து வைத்தார். பி.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி, ஆர்.கே.ஆர்.,கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, உடுமலை தொழில் வர்த்தக சபை தலைவர் அருண்கார்த்திக், பி.ஏ.ஐ.,மாநில பொருளாளர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை, பி.ஏ.ஐ., உடுமலை மைய தலைவர் பாலமுருகன், செயலாளர் ரவிசங்கர், பொருளாளர் அருண்குமார், அஸ்திவாரம் ஒருங்கிணைப்பாளர் குமரவேல், தமிழிசைச்சங்க தலைவர் ரவீந்திரன், செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் ஜெயப்பிரகாஷ், கவுரவ தலைவர் ஸ்ரீதர், நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை