மேலும் செய்திகள்
கன்டெய்னர் லாரிகள் தேக்கம்
02-Dec-2024
திருப்பூர்; திருப்பூரில் இருந்து, கன்டெய்னர் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் சரக்கு பண்டல்கள், துாத்துக்குடியில் உள்ள சரக்கு முனையத்தில் இறக்கப்படுகிறது. சுங்கவரித்துறை சரிபார்த்த பின், கப்பல் கன்டெய்னரில் மாற்றி அனுப்பி வைக்கிறது. சில நாட்கள், சரக்கு முனையங்களில் சரக்குகளை வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.இப்படி, ஏற்றுமதிக்கான பின்னலாடை பார்சல்களை வைத்திருந்த போதுதான், கடந்த ஆண்டு சரக்கு முனையத்தில் மழைநீர் புகுந்து சேதம் ஏற்பட்டது. காப்பீடு செய்திருந்ததால், ஏற்றுமதியாளர் இழப்பீடு பெற்று நஷ்டத்தை ஈடுகட்டினர்.கடந்த வாரம் பெய்த கனமழையால், துாத்துக்குடி துறைமுகப் பகுதிகள் புதிய பிரச்னையை சந்தித்துள்ளன. துறைமுகம் பைபாஸ் ரோட்டில் உள்ள, தனியார் சரக்கு முனையங்கள், ரோட்டில் இருந்து தாழ்வான பகுதியில் அமைந்துள்ளன. துறைமுகப்பகுதிகளில், மழைநீர் வடிகால் பணி நடந்து வருவதால், ரோடுகள் மண் சாலையாக மாறியுள்ளன. சரக்கு முனையங்களுக்கு செல்லும் பாதைகள், சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இதனால், சரக்கு ஏற்றிச்சென்ற பல்வேறு கன்டெய்னர் வாகனங்கள் நேற்று சேற்றில் சிக்கி விபத்து ஏற்பட்டது. 'கிரேன்' வாயிலாக லாரிகள் மீட்கப்பட்டு, சரக்குகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன..
'கன்டெய்னர்' வாகனங்கள் சென்றுவரும் பாதையை துறைமுக நிர்வாகம் சரியாக பராமரிக்க வேண்டும். லாரிகள் சேற்றில் சிக்கியதால், டிரைவர்களே செலவு செய்து, லாரிகளை மீட்டுள்ளனர். சரக்கு முனையத்துக்கு செல்லும் பாதைகளை, தார் ரோடுகளாக பராமரிக்க வேண்டும். பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்து, விரைவில் தார்ரோடு அமைக்கப்பட வேண்டும். தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை, மோட்டாரில் உறிஞ்சி, ரோட்டில் வெளியேற்றியதே விபத்து ஏற்பட காரணம். மழைநீரை உறிஞ்சி, கால்வாய்கள் வாயிலாக வெளியேற்ற வேண்டும். சரக்கு முனையங்களில், கன்டெய்னர் லாரி டிரைவர் மற்றும் உதவியாளருக்கு அடிப்படை வசதியில்லை. உணவக வசதியுடன் கூடிய, டிரைவர்கள் ஓய்வு இல்லங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும்.- கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள்.
02-Dec-2024