மேலும் செய்திகள்
புதிய ரேஷன்கார்டுகள் வழங்க நடவடிக்கை
07-Nov-2024
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த குடும்பத்தினர் அதிகம் வசிக்கின்றனர். தொழில் நிமித்தமாக திருப்பூரில் வசித்து வந்தாலும், சொந்த ஊரில் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் அதிகம் உள்ளனர்.'ஒரே நாடு ஒரே ரேஷன்' என்ற திட்டத்தில், வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட மக்கள், எங்கு வேண்டுமானாலும், ரேஷன் பொருள் பெறலாம். தங்களது ஆதார் விவ ரத்தை தெரிவித்து, வெளிமாநில மக்கள், அம்மாநில ரேஷன் திட்டத்திலும், தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இங்குள்ள ரேஷன் திட்டத்திலும் பொருட்கள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டு களாக, 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் நடைமுறையில் இருந்தும், ரேஷன் பொருள் ஒதுக்கீடு முறையாக இல்லை. ரேஷன் கடைக்கு, வழக்கமான அளவு மட்டுமே பொருட்கள் ஒதுக்கப்படுகிறது; வெளிமாவட்ட மக்களும் பொருட்களை வாங்குகின்றனர். இதன்காரணமாக, பிறகு வரும் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் கிடைப்பதில்லை.குறிப்பாக, திருப்பூர் தெற்கு தாலுகா, மங்கலம் கிராமம், அக்ரஹாரப்புத்துார் கடையில், பொருட்கள் வாங்க, மூன்று தவணையாக சென்றுவர வேண் டியுள்ளது. சில மாதங்களாக கோதுமை கிடைப்பதில்லை. அனைத்து பொருட்களும் ஒரே தவணையாக கிடைப்பதில்லையென, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால், ஞாயிற்றுக்கிழமை கடை திறக்கப்படுகிறது; இருப்பினும், ரேஷன் பொருட்கள் இல்லாமல் கடை திறப்பது யாருக்கும் பயனற்று போய்விடுவதாக, கார்டுதாரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.கலெக்டர் கண்காணிக்கணும்!திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள், குறிப்பாக மாநகராட்சி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில், 20ம் தேதியே பொருட்கள் இருப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதன்பின், வரும் கார்டுதாரர்களுக்கு பதில் கூற முடியாமல், வாக்குவாதம் ஏற்படுகிறது. பணியாளர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில மக்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. எனவே, அதற்கேற்றவாறு கூடுதல் ஒதுக்கீடு செய்ய, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். குறிப்பாக, ரேஷன் கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப, பொருள் ஒதுக்கீடு செய்வதை, கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.- கவுதமன், திருப்பூர் மாவட்ட கூட்டுறவுபணியாளர் சங்க மாவட்ட தலைவர்.
07-Nov-2024