கூட்டுறவு பட்டய பயிற்சி காசி விநாயகர் கோவிலில் மே 23ல் கும்பாபிேஷகம்
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் பிரபு அறிக்கை:தாராபுரத்தில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024 - 25ம் ஆண்டுக்கான 24வது தபால் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி, புதிய பாடத்திட்டத்தின்படி, வரும் மே, 9ல் துவங்குகிறது.பயிற்சியில் சேர விரும்புவோர், www.tncu.tn.gov.inஎன்கிற இணையதளத்தில், வரும், 16ம் தேதி முதல் மே, 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 17 வயது நிரம்பிய மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து நிரந்தர பணியாளர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. வார இறுதி நாட்களில் வகுப்புகள் நடத்தப்படும்.அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலான ஸ்ரீகாசி விநாயகர் கோவில், கிழக்கு ரத வீதியில் உள்ளது. கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக மராமத்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. பணிகளை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் சபரீஷ் குமார், அறங்காவலர்கள் பொன்னுச்சாமி, விஜயகுமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.''வரும் மே 23ம் தேதி காலை 6.30 மணி முதல் 7.31 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்'' என தெரிவித்தனர். இக்கோவில் கும்பாபிஷேகம், 36 ஆண்டுகள் முன்பு நடைபெற்றது.