உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நாளை துவங்குகிறது கூட்டுறவு வார விழா

 நாளை துவங்குகிறது கூட்டுறவு வார விழா

திருப்பூர்: திருப்பூர் - பல்லடம் ரோட்டிலுள்ள வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 72 வது கூட்டுறவு வார விழா, நாளை, கொடியேற்று விழா மற்றும் மரம் நடும் விழாவுடன் துவங்குகிறது. நாளைமறுநாள், வீரபாண்டி கூட்டுறவு வீடுகட்டும் சங்கத்தில் கடன் மேளா மற்றும் உடுமலை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கூட்டுறவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெறுகின்றன. வரும் 16ம் தேதி, திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் விற்பனை மேளா; 17 ம் தேதி, தாயம்பாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் தாராபுரத்தில் ரத்த தான முகாம் நடைபெறுகிறது. வரும் 18 ம் தேதி, திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், கருத்தரங்கம்; 19ம் தேதி, கொடுவாய் சுப்பராய கவுண்டர் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ