உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குட்டையில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்திய கவுன்சிலர்

குட்டையில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்திய கவுன்சிலர்

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினசரி சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கென தனி இடம் இல்லாததால் ஆங்காங்கே உள்ள காலாவதியான பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என, பாறைக்குழியில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது, முதலிபாளையத்தில் உள்ள தனியார் பாறைக்குழியில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதற்கு பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட் உத்தரவின்படி தற்காலிகமாக பாறைக்குழியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், குப்பை கொட்ட இடமில்லாததால், குப்பை எடுப்பது நிறுத்தப்பட்டு, வீதிகளில் ஆங்காங்கே குப்பை தேங்கி, துர்நாற்றம் வீசி வருகிறது. வீதிகளில் எடுக்கப்பட்ட குப்பைகளை துாய்மை பணியாளர்கள், 4வது வார்டு நெருப்பெரிச்சல் ஜெ.ஜெ. நகரில் தண்ணீர் உள்ள குட்டையில் கொட்டி உள்ளனர். இதற்கு கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. வார்டு கவுன்சிலர் முத்துசாமி கூறுகையில், ''குட்டையில் அதிக அளவில் தண்ணீர் உள்ளது. அதில் குப்பையை கொட்டினால், நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கும். எனவே, குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தி உள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !