உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை, வடிகால் அமைக்க கவுன்சிலர்கள் மனு

சாலை, வடிகால் அமைக்க கவுன்சிலர்கள் மனு

திருப்பூர்; மாநகராட்சி 48வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி, மேயர் மற்றும் கமிஷனருக்கு அளித்த மனு: மாநகராட்சி 48வது வார்டுக்கு உட்பட்ட ராக்கியாபாளையம் பிரிவு முதல் செவந்தாம்பாளையம் செல்லும் ரோடு, காங்கயம் ரோட்டையும், தாராபுரம் ரோட்டையும் இணைக்கும் முக்கியமான ரோடு. இந்த பகுதியில் பல்வேறு முக்கிய குடியிருப்புகள், தொழிற்சாலைகள், பள்ளிகள் அமைந்துள்ளன. தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாகச் சென்று வருகின்றன. இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திலும் நான்காவது குடிநீர் திட்டத்திலும் குழாய்கள் பதிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், இந்த ரோடு சேதமடைந்து, வாகனங்கள் செல்வதில் இடையூறு நிலவியது. தற்போது குழாய் பதிப்பு பணிகள் முடிந்துள்ளதால் புதிய ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். சாக்கடை கால்வாய் 36வது வார்டு கவுன்சிலர் திவாகரன் அளித்த மனுவில், 'சின்னான் நகர், நான்கு வீதிகள், சூசையாபுரம் பகுதிகளில் கான்கிரீட் ரோடுகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சாக்கடை கால்வாய் கட்டுமானம் இல்லை. கால்வாய் இல்லாமல் கான்கிரீட் தளம் அமைப்பதில் எந்த பயனும் இல்லை. எனவே இந்த பகுதிகளில் சாக்கடை கால்வாய் கட்ட வேண்டும்,' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ