உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையோர ஆக்கிரமிப்புகள் காற்றில் பறந்த கோர்ட் உத்தரவு?

சாலையோர ஆக்கிரமிப்புகள் காற்றில் பறந்த கோர்ட் உத்தரவு?

திருப்பூர்,; 'தென்னம்பாளையம் மார்க்கெட் முதல் மத்திய பஸ் ஸ்டாண்ட் வரை, இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில், கோர்ட் உத்தரவு மீறப்பட்டுள்ளது' என, குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.நல்லுார் நுகர்வோர் நலமன்ற தலைவர் சண்முகசுந்தரம், முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனு:திருப்பூர் - பல்லடம் ரோட்டில், தென்னம்பாளையம் முதல், மத்திய பஸ் ஸ்டாண்ட் வரை இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை சுட்டிக்காட்டி, மணிகண்டன் என்பவர், கடந்தாண்டு 2024 ஏப்., மாதம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். கோர்ட் விசாரணையில், '6 மாத காலத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.இதனால், வழக்கு முடித்து வைக்கப்படுவதாக கோர்ட் தெரிவித்தது. ஆனால், அதிகாரிகள் சார்பில், கோர்ட்டில் உத்தரவாதம் அளித்து, 13 மாத காலமாகியும் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகமாகி வருகிறது. குறிப்பாக, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், அதிக ஆக்கிரமிப்புகள் முளைக்கின்றன; இச்செயல், கோர்ட் உத்தரவை மீறுவதாகும்.எனவே, மாநகராட்சி கமிஷனர், இவ்விவகாரத்தில் தலையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மீண்டும் ஆக்கிரமிப்பு எழாவண்ணம் நடவடிக்கை எடுக்கவும் உரிய வழிகாட்டுதல் வேண்டும். தவறும்பட்சத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ