உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரைசர் நிறுவன விளம்பர துாதராக கிரிக்கெட் வீரர் ஜடேஜா நியமனம்

அரைசர் நிறுவன விளம்பர துாதராக கிரிக்கெட் வீரர் ஜடேஜா நியமனம்

திருப்பூர்: 'அரைசர்' நிறுவன மேலாண்மை இயக்குநர் அருணேஷ்வர் கூறியதாவது: அரைசர் குடும்பத்தில் ரவீந்திர ஜடேஜாவை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம். அவர் தொடர்ந்து உழைத்து, இந்தியாவின் நம்பகமான ஆல்-ரவுண்டராக வளர்ந்தது போலவே, அவருடைய பயணமும், அதே லட்சியத்தையும், உறுதியையும், முறையையும் பிரதிபலிக்கிறது. அவரது துல்லியமான விளையாட்டு அறிவும், இயல்பான தன்னம்பிக்கையும், அரைசருக்கு சரியான முகமாக அவர் உள்ளார். எங்கள் நிறுவனம் குறித்து அவர் கூறுகையில், 'இன்றைய ஆண்களின் வாழ்க்கையை உண்மையிலேயே புரிந்து கொள்ளும், இந்திய பிராண்ட் 'அரைசருடன்' சேர்ந்து பணியாற்றுவதில், நான் பெருமைபடுகிறேன். பயிற்சி, பயணம், நிகழ்ச்சி என, எங்கு சென்றாலும், நான் அணியும் உடைகள் அழகாக மட்டுமல்லாமல், வசதியாகவும் இருக்க வேண்டும். அரைசர் அதையே அளிக்கிறது,' என்றார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ