சி.எஸ்.ஐ., சர்ச்சில் பிரார்த்தனை
அவிநாசி,; அவிநாசி, பார்க் வீதியில் உள்ள சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச்சில், குடியரசு தினத்தை முன்னிட்டு சர்ச் முன்பு தேசிய கொடியேற்றப்பட்டது. அனைவரும் நலமும் வளமும் பெற பிரார்த்தனை நடந்தது. ஆயர்த்தலைவர் பிரதீப் கமல், திருமண்டல உறுப்பினர்கள், போதக சேகர உறுப்பினர்கள், வாலிபர் ஐக்கிய சங்கம் மற்றும் சபை மக்கள் கலந்து கொண்டனர்.