உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: பசுமை ஆர்வலர்கள் வேதனை

மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: பசுமை ஆர்வலர்கள் வேதனை

திருப்பூர்; திருப்பூர் மாநகர பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் அன்றாடம் பழமையான மரங்களை வெட்டி சாய்ப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.நிழல் கொடுத்து பசுமையாக காட்சி தந்து வந்த பழமையான மரங்களை வெட்டுகின்றனர். தினமும் நடக்கும் மர கொலையை வழக்கம் போல் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து விடுகின்றனர். அவ்கையில், நேற்று திருப்பூர், எம்.எஸ்., நகர் கருப்பராயன் கோவில் அருகில், 20 ஆண்டுகள் பழமையான அரச மரம், ஆல மரம் உள்ளிட்ட பழமையான மரங்களை அப்பகுதியில் பட்டப்பகலில் வெட்டி சாய்த்தனர். அரசு ஒரு புறம் சுற்றுசூழலை பாதுகாக்க, மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு செய்து வரும் நிலையில், மறு பக்கம் பழமையான மரங்களை வெட்டி வருகின்றனர். வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் இந்த மர கொலையை தடுத்து நிறுத்துவதோடு, வெட்டுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி