உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிலம்ப போட்டி; மாணவர் அசத்தல்

சிலம்ப போட்டி; மாணவர் அசத்தல்

திருப்பூர் : முதல்வர் விளையாட்டு போட்டிகளில் சிலம்ப போட்டியில், அரசு பள்ளி மாணவர்கள் அசத்தினர்.தொடுபுள்ளிகள் முறையில் நடந்த போட்டியில் பள்ளி அளவில், 55 கிலோவுக்கு குறைவான எடை பிரிவில், கே.எஸ்.சி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 11ம் வகுப்பு மாணவர் பத்மநாபன், மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.அதே எடை பிரிவில், சின்னச்சாமி அம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவர் கனிஷ்க், மூன்றாமிடம் பிடித்தார்.இவர்கள் இருவரும், கோல்டன் நகர் முத்தமிழ் சிலம்ப பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்.வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர், மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை