மேலும் செய்திகள்
உயர் கோபுர மின்விளக்கு திருப்போரூரில் துவக்கம்
02-Nov-2025
திருப்பூர்: திருப்பூர் யுனிவர்சல் ரோடு பகுதியில், இரவு, பகலாக 'ைஹமாஸ்' விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால், விபத்து அபாயம் இருப்பதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, யூனியன் மில்ரோடு - யுனிவர்சல் ரோடு சந்திப்பு பகுதியில், உயர்கோபுர விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. நொய்யல் ரோட்டில், அதிக போக்குவரத்து இருப்பதால், உயர்கோபுர மின் விளக்கு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, பகல் மற்றும் இரவு என, உயர்கோபுர விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. இதனால், மின்விளக்குகள் சூடாகி, விபத்து அபாயம் இருப்பதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். மின்விளக்கின் பயன்பாடும் விரைவில் முடிந்துவிடும். மாநகராட்சி நிர்வாகம், தெருவிளக்கு பராமரிப்பு பிரிவு வாயிலாக கண்காணித்து, முறைப்படுத்த வேண்டுமென கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
02-Nov-2025