உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பைபாஸ் ரோட்டிலுள்ள நடைபாதையில் ஆபத்து

பைபாஸ் ரோட்டிலுள்ள நடைபாதையில் ஆபத்து

உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, பைபாஸ் ரோடு வரும் பயணியர் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக, மழை நீர் வடிகால் மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதை முறையாக பராமரிக்காததால், பல இடங்களில் உடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. மழை நீர் வடிகாலாகவும், சாக்கடை கழிவு நீர் செல்லும் நிலையில், அதன் மீது அமைக்கப்பட்டுள்ள நடைபாதை பல இடங்களில் உடைந்துள்ளது. நடந்து வரும் பொதுமக்கள் தவறி உள்ளே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, பைபாஸ் ரோட்டிலுள்ள நடைபாதையை புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை