உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர்; தேசிய கல்வி கொள்கையை ஏற்கும் வரை, தமிழகத்துக்கு கல்வி நிதியை வழங்க முடியாது என்று கூறிய, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும், தமிழகத்துக்கு வரவேண்டிய, 2,401 கோடி ரூபாயை ஒதுக்க கோரியும், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற, மாநகர் மாவட்ட தலைவர் விஜய் தலைமை வகித்தார். மாநில செயலாளர் தினேஷ், மாநகர் மாவட்ட செயலாளர் அரவிந்த்குமார், புற நகர் மாவட்ட செயலாளர்கள் அமுல், முத்துக்குமார் உள்ளிட்டோர், பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை