மேலும் செய்திகள்
நகராட்சி வளர்ச்சி பணிகள் அதிகாரிகள் குழு ஆய்வு
04-Jan-2025
திருப்பூர் : மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார்.மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, முதன்மை பொறியாளர் செல்வநாயகம் ஆகியோர் நேற்று மாநகராட்சி சார்பில் நடந்து வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அம்ரூத் திட்டத்தில் எஸ்.பெரியபாளையத்தில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் கழிவு நீர் சேகரிப்புக்கு தொட்டி கட்டும் பணி நடக்கிறது. இப்பணியை ஆய்வு செய்த கமிஷனர், அதை விரைந்து செய்து முடிக்க அறிவுறுத்தி, சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.அதன்பின், 48வது வார்டு பொன்முத்து நகர் பகுதியில் நான்காவது குடிநீர் திட்டத்தில் வீட்டு குழாய் இணைப்பு வழங்கும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது மாநகராட்சி பொறியியல் பிரிவினர், ஒப்பந்த நிறுவனத்தினர் பணிகள் நிலவரம் குறித்து விளக்கினர்.
04-Jan-2025