மாரியம்மன் கோவிலுக்கு பூவோடு எடுத்த பக்தர்கள்
அவிநாசி; சேவூரில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 30ம் தேதி கம்பம் நடுதல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று அம்மை அழைத்தல் நிகழ்ச்சியில் மாவிளக்கு எடுத்து வந்து சக்தி மாரியம்மனை பக்தர்கள் வழிபட்டனர்.பூவோடு எடுத்து பக்தர்கள் குண்டம் இறங்கினர். இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. அன்னதானம், நீர்மோர் ஆகியவை விழாகமிட்டி சார்பில் வழங்கப்பட்டது.