| ADDED : டிச 27, 2025 06:34 AM
அவிநாசி: அவிநாசியில் இருந்து சபரிமலைக்கு, 17 வது ஆண்டாக அய்யப்ப பக்தர் பாதயாத்திரையாக புறப்பட்டுள்ளார். அவிநாசி, வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 60. ஒர்க் ஷாப் வைத்துள்ளார். அய்யப்ப பக்தரான இவர் தொடர்ந்து, 43 ஆண்டுகள் எருமேலியில் இருந்து சன்னிதானம் வரை பெருவழியில் சென்று அய்யப்பனை தரிசனம் செய்து, மகரஜோதியை வழிபட்டுள்ளார். கடந்த, 16 ஆண்டுகளாக, அவிநாசியிலிருந்து சபரிமலைக்கு தனி நபராக பாதயாத்திரை சென்று வழிபட்டு வருகிறார். நேற்று முன்தினம் ஸ்ரீ காசி விநாயகர் கோவிலில் இருமுடி கட்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, பாதயாத்திரையை துவக்கினார். அவரை, அவரது உறவினர்கள், நண்பர்கள் வழியனுப்பி வைத்தனர். கார்த்திகேயன் கூறுகையில், ''வரும், ஜன. 15ம் தேதிக்குள் சுவாமி தரிசனம் முடித்து புல்மேட்டில் இருந்து ஜோதி தரிசனம் செய்துவிட்டு, அவிநாசிக்கு திரும்புவேன். பொது நலனுக்காகவே சபரிமலைக்கு பாதயாத்திரை சென்று வரு கிறேன்,'' என்றார்.