பக்தி இன்னிசை நிகழ்ச்சி; பக்தர்கள் பங்கேற்பு
உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை விழா மன்றம் சார்பில், பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில், தொடர் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், புரட்டாசி மாத கிருத்திகையையொட்டி, பக்தி இன்னிசை நிகழ்ச்சி பிரசன்ன விநாயகர் கோவிலில் நடந்தது.அமிர்தவர்ஷினி, ஸ்ரீ ஹர்சினி சகோதரிகள் பங்கேற்று பாடினர். சஞ்சித்வர்மன் வயலின்; மணிகண்டன் மிருதங்கம்; பாலசங்கர் முகர்சங்கு வாசித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.