உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டிஜிட்டல் உயிர்வாழ் சான்று தபால் துறையினர் அழைப்பு

டிஜிட்டல் உயிர்வாழ் சான்று தபால் துறையினர் அழைப்பு

திருப்பூர்: ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பெற, தபால் நிலையங்களில், சிறப்பு முகாம் ஒரு மாதம் நடக்கவுள்ளது.திருப்பூர், தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கைஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை மற்றும் ஆதார் ஆவணம் வழங்கும் ஆணையம், இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி சார்பில், நாடு முழுதும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பிரசாரம் வரும், 30ம் தேதி வரை நடக்கவுள்ளது.ஆதார் ஆவணம் வழங்கும் ஆணையம் ஒத்துழைப்புடன், ஓய்வூதியர்களின் வசதிக்காக, காகித முறையிலான ஓய்வூதிய சான்றிதழ் சமர்ப்பித்தலை புதுப்பித்து, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.மாநில, மத்திய, மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலமாக ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும் இதில் பயன்பெறலாம். இதனால், ஓய்வூதியர்கள் தங்கள் ஓய்வூதியம் பெற்ற அலுவலகத்திலோ, வங்கிக்கோ சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது.தங்கள் வீட்டில் இருந்தபடியே அருகில் உள்ள தபால் நிலையத்தையோ, முகாம்களிலோ சமர்பிக்கும் வசதி கிடைக்கிறது. சான்றிதழ் பரிசீலிக்கப் பட்டவுடன், ஓய்வூதியர்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கே ஓய்வூதிய சான்றிதழ் சமர்ப்பித்த குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு சேவை கட்டணம், 70 ரூபாய்.அத்துடன் சான்றிதழை, https:ccc.cept.gov.in/servicerequest/request.aspx என்ற இணையதளத்திலும், pos tinfo என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த சேவையை வழங்க அனைத்து தபால் நிலையங்களிலும் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி