உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தினமலர் செய்தி எதிரொலி: பேக்டர் 8 தடுப்பூசி வந்தது; நோயாளிகள் ஆறுதல்

தினமலர் செய்தி எதிரொலி: பேக்டர் 8 தடுப்பூசி வந்தது; நோயாளிகள் ஆறுதல்

திருப்பூர், : 'தினமலர்' நாளிதழ் செய்தியை தொடர்ந்து, ஹீமோபிலியா நோயாளிகளுக்கான 'பேக்டர் 8' தடுப்பூசி, மருந்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மருத்துவமனைக்கு சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மரபணு குறைபாடுகளில் ஒன்று, ஹீமோபிலியா. இக்குறைபாடு உள்ளவர்களுக்கு, ரத்தம் உறையும் தன்மை இருக்காது; காயம்படும் போதோ, உடல் நலக்குறைபாடு ஏற்பட்டாலோ உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில், ரத்தம் தொடர்ந்து வெளியேறும்; உரிய சிகிச்சை பெற விட்டால், உயிருக்கே ஆபத்தாகி விடும். இந்த குறைபாடுடன் திருப்பூர் மாவட்டத்தில், 70 க்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவப்பிரிவு, திருப்பூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செயல்படுகிறது. இப்பிரிவிலில், 'பேக்டர் 8' தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக, நோயாளிகள் தெரிவித்தனர்.மருத்துவமனை நிர்வாகம் தரப்பில்,' மருந்து, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து, மருத்துவத்துறைக்கு கருத்துரு அனுப்பபட்டுள்ளது. விரைவில் தடுப்பூசி பெறப்பட்டு, குறைபாடு உடையவருக்கு உடனடியாக செலுத்தப்படும்,' என தெரிவிக்கப்பட்டது. ஜூன் மாதத்துக்கு பின் தடுப்பூசி, மருந்து வராதது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மறுநாள், 'தினமலர்' நாளிதழுடன் கலெக்டரை சந்தித்து, ஹீமோபிலியா பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டனர். இதனால், சென்னை மருந்துகள் துறையில் இருந்து, 15 நாட்களுக்கு தேவையான 'பேக்டர் 8' தடுப்பூசி, மருந்துகள், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. , ஹீமோபிலியா பாதித்தவர்கள் தற்காலிக ஆறுதல் அடைந்துள்ளனர்.-------

'மருந்துகள் தட்டுப்பாடு இல்லாத நிலை எட்டப்படும்'

ஹீமோபிலியா நோயாளிகள் எப்போது வேண்டுமானலும் மருத்துவமனையை நாடி, டாக்டர்களை சந்தித்து, ஆலோசனை, சிகிச்சை பெறலாம். மாவட்டத்தில் உள்ள மொத்த ஹீமோபிலியா நோயாளிகள் விபரம், யார் யாருக்கு எந்தெந்த பேக்டர் மருந்து தேவைப்படுகிறது ஆகிய விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டு வருகிறது. நவ., மாத இறுதிக்குள் மருந்து தட்டுப்பாடு இல்லாத நிலை எட்டப்பட்டு விடும்.- அகிலா, ஹீமோபிலியா பிரிவு மருத்துவர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி