உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோடைகால அறிவியல் பயிற்சி மாணவர்களுடன் கலந்துரையாடல்

கோடைகால அறிவியல் பயிற்சி மாணவர்களுடன் கலந்துரையாடல்

உடுமலை: உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கோடைகால அறிவியல் பயிற்சி பட்டறை ஐந்து நாட்கள் நடந்தது.இப்பயிற்சியில் ராக்கெட்டை ஏவுதல், மடிப்பு நுண்ணோக்கி தயாரித்தல், ரோபோடிக்ஸ், ஆரியபட்டா மாதிரி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு விழாவில் ஆசிரியர் தர்மராஜ் வரவேற்றார். உடுமலை தமிழிசை சங்க துணைத்தலைவர் மணி தலைமை வகித்தார். ஆர்.ஜி.எம்., பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.விக்ரம் சாராபாய் நிறுவன விஞ்ஞானி பரமசிவம், ராக்கெட் தயாரித்தல் மற்றும் அதிலுள்ள தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் அருள் ஜோதி பயிற்சி பட்டறை குறித்து பேசினார்.தமிழிசை சங்க செயலாளர் சண்முகசுந்தரம், பயிற்சி பட்டறையால் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். கல்வித்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், பல்வேறு சங்கத்தினர் விழாவில் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை