விநாயகர் ஊர்வலத்தில் தகராறு; விசாரணை
திருப்பூர்; திருப்பூர் புதுக்காட்டை சேர்ந்தவர் மணிகண்டன், 20, சபரி, 21, 17 வயது சிறுவன் ஆகியோர் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்துக்கு செல்ல தாராபுரம் ரோடு வித்ய கார்த்திக் திருமண மண்டபம் அருகே விநாயகர் சிலையுடன் ரோட்டில் நின்று கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த ராம்குமார், 20, மதன், 20, முனீஸ்வரன், 20 உள்ளிட்ட, ஆறு பேர் டூவீலரில் சென்றனர். அப்போது, ரோட்டில் நின்றிருந்தவர்கள் மீது மோதுவது போல் சென்றதால், இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள், மூன்று பேரையும் அந்த கும்பல் தாக்கியது. மணிகண்டன், சபரி, 17 வயது சிறுவன் காயமடைந்தனர். எதிர் தரப்பில், ராம்குமாருக்கு காயம் ஏற்பட்டது. நான்கு பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். புகாரின் பேரில், நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.