உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில போட்டிக்குத் தேர்வு மாவட்ட போட்டிகள் துவங்கின

மாநில போட்டிக்குத் தேர்வு மாவட்ட போட்டிகள் துவங்கின

திருப்பூர்: மாநில போட்டிக்கு தகுதியான திருப்பூர் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கின. பள்ளி கல்வித்துறை சார்பில் நவம்பர் முதல் வாரம் மாநில விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. கடந்த வாரம் தடகள போட்டி முடிந்த நிலையில், இன்று (அக்.,22) மற்ற போட்டிகள் துவங்கின. பழங்கரை டீ பப்ளிக் பள்ளியில் 14, 17 மற்றும் 19 வயது பிரிவுக்கான டென்னிஸ் போட்டி நடந்தது. தனிநபர் பிரிவில் 7 பேர், குழு பிரிவில் 21 பேர் பங்கேற்றனர். தாராபுரம் ரோடு மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமியில் 19 வயது பிரிவு பேட்மின்டன் போட்டியில் தனிநபர், குழு பிரிவில் 210 பேர் பங்கேற்றனர். கே.செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 14 வயது மாணவர் கால்பந்து போட்டி நடந்தது. 7 அணிகளை சேர்ந்த 126 பேர் பங்கேற்றனர். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், பள்ளி தாளாளர் சின்னையன் துவக்கி வைத்தனர். சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் 14, 17, 19 வயது மாணவர் பால்பேட்மின்டன் போட்டிகள் நடந்தன. போட்டிகள் வரும் 28ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு மைதானங்களில் நடக்கிறது. படங்கள்; 6 காலம்– செய்தி 2காலம் மாநில போட்டிக்கு யாரு ‘மாஸ்?’; தெறிக்கவிடும் மாவட்ட போட்டி மாநில போட்டிக்கு தகுதியான திருப்பூர் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கின. தாராபுரம் ரோடு, மோகன்ஸ் அகாடமியில் நடந்த பேட்மின்டன் போட்டியில் பங்கேற்ற மாணவி. சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் நடந்த பால் பேட்மின்டன் போட்டியில் விளையாடும் மாணவர்கள். கே.செட்டிபாளையம் விவேகானந்தா பள்ளியில் கால்பந்துப் போட்டி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை