மேலும் செய்திகள்
மாவட்ட கூடைப்பந்து: தாராபுரம் பள்ளி வெற்றி
26-Oct-2025
திருப்பூர்: மாவட்ட போட்டியில் வெற்றி பெற்று, மாநில கால்பந்து போட்டிக்கு செல்வது யார் என்பதில், இரு பள்ளி மாணவியர் அணிக்கு இடையே ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. டை பிரேக்கர் வரை போட்டி சென்றதால், ஆர்வம் கூடியது. பள்ளி கல்வித்துறை சார்பில், 19 வயது பிரிவு, மாவட்ட மாணவியர் கால்பந்து போட்டி, கே.செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாயலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. குறுமைய அளவில் முதலிடம் பெற்ற ஏழு பள்ளி அணிகள் நாக்-அவுட் சுற்றில் பங்கேற்றன. முன்னதாக போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், விவேகானந்தா பள்ளி முதல்வர் சின்னையன் துவக்கி வைத்தார். குறுமைய போட்டி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் போட்டிகளை ஒருங்கிணைத்தார். நடுவர்களாக இருதயராஜ், மோகனசுந்தரம், சக்தி, அருண், பிரபாகரன் செயல்பட்டனர். உடுமலை பள்ளிகள் அசத்தல் இறுதி போட்டியில், உடுமலை, ஆர்.வி.ஜி., மெட்ரிக் - கணியாம்பூண்டி, மைக்ரோ கிட்ஸ் பள்ளி மாணவியர் அணிகள் மோதின. மாநில போட்டிக்கு தேர்வாகும் முனைப்பில், இரு அணி வீராங்கனைகளும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்; தடுப்பு ஆட்டம் மூலம் ஒரு புறம் கோல்கள் தடுக்கப்பட்டது. ஆட்ட நேரம் (40 நிமிடம்) நிறைவு பெறும் வரை இரு அணியும் (0-0) கோல் போட முடிவில்லை. ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது. கூடுதல் 15 நிமிடத்தில் அசத்திய உடுமலை ஆர்.வி.ஜி. அணி 4 - 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நஞ்சப்பா பள்ளியில் நடந்த, 19 வயது மாணவர் இறுதி போட்டியில், உடுமலை, ஆர்.ஜி.எம்., பள்ளி அணி, 2 - 0 என்ற கோல் கணக்கில், நஞ்சப்பா பள்ளி அணியை வென்றது. இன்றும் மாவட்ட கால்பந்து போட்டி நடக்கிறது.
26-Oct-2025