மாவட்ட ஹாக்கி போட்டி; அரசு பள்ளி வெற்றி
உடுமலை ; பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடந்த, மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டியில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், திருப்பூர் மாவட்ட அளவில் குறுமையங்களுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கிப்போட்டி நடந்தது.இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில், மூலனுார் பாரதிவித்யாலயா பள்ளி அணியை, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.தொடர்ந்து திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு, இப்பள்ளி அணி தகுதி பெற்றுள்ளது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.