மேலும் செய்திகள்
விநாயகா மிஷன் போட்டிகள்: 100 பள்ளிகள் பங்கேற்பு
10-Jul-2025
உடுமலை; உடுமலையில், தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி நடந்தது. தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஹாக்கி லீக்ஸ் போட்டி, குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியை பள்ளி தலைமையாசிரியர் ஞானசேகரன் துவக்கி வைத்தார். பள்ளி உடற்கல்வி இயக்குனர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். பெதப்பம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமாரவேல் தலைமை வகித்தார். மாவட்ட அளவில் 8 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடந்தது. பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, 7-0 என்ற கோல் கணக்கில் திருப்பூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியை வீழ்த்தி வெற்றி பெற்றது. குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி, லுார்து மாதா மெட்ரிக் பள்ளி 0-0 என்ற கோல் கணக்கில் 'டிராவில்' முடிந்தது. உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை 9-0 என்ற கோல் கணக்கில் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த போட்டியில் லுார்துமாதா பள்ளி 1-0 என்ற கோல் கணக்கில் திருப்பூர் செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளியை வென்றது.
10-Jul-2025