உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாவட்ட சிலம்பப்போட்டி: 350 மாணவர்கள் பங்கேற்பு

 மாவட்ட சிலம்பப்போட்டி: 350 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் ஜிகினா சிலம்பம் அகாடமி சார்பில் உலக சிலம்ப தினத்தையொட்டி, திருப்பூர், பல்லடம் ரோடு பாரத் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட சிலம்பாட்டப் போட்டி நடந்தது. சிலம்பாட்ட கழகத் தலைவர் ரங்கசாமி, பள்ளி தாளாளர் பட்டீஸ்வர குமார சாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், சிலம்ப பயிற்சியாளர்கள் மதிவாணன், அருணாச்சலம் மற்றும் கொடியரசன் முன்னிலை வகித்தனர். எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள் என இரு பிரிவுகளில் தனித்திறமை மற்றும் தொடுமுறை என்று இரு வகையான சிலம்பப்போட்டிகள் நடந்தது. 350 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஐந்தாம் வகுப்பு வரையிலானோருக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. ஆறாம் வகுப்புக்கு மேலான மாணவர்களில், முதலிடம் பெற்ற 20 பேருக்கு 3 கிராம் வெள்ளி காசு, இரண்டாம் இடம் பெற்ற 20 பேருக்கு 1 கிராம் வெள்ளி காசு, மூன்று மற்றும் நான்காம் இடம் பெற்ற 40 பேருக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி