உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட பேச்சுப்போட்டி; மாணவர்களுக்கு அழைப்பு

மாவட்ட பேச்சுப்போட்டி; மாணவர்களுக்கு அழைப்பு

உடுமலை : தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வரும் 23, 24ம் தேதிகளில் நடக்கிறது.காந்திஜெயந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி அக்., 23, 24ம்தேதிகளில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, ரொக்கத் தொகை பரிசுகளும், சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகிறது.பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்களும் காலை, 10:00 மணிக்கும், கல்லுாரி மாணவர்களுக்கு மதியம், 2:00 மணிக்கும் பேச்சுப்போட்டி நடக்கிறது.போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளி, கல்லுாரி நிர்வாகங்களில் விபரங்களை அறிந்துகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை